ALL VIDEO ஆன்மீகம் NEWS
மகேஷ் பூபதி
June 7, 2020 • Dharmalingam

மகேஷ் பூபதி

மகேஷ் சீனிவாஸ் பூபதி (பிறப்பு - ஜூன் 7, 1974 இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் ல் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் விளையாடினார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

 இவர் 1995ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.

மகேஷ் பூபதி வரிப்பந்து பயிற்சி கழகம்  என்பது  இந்திய வரிப்பந்து விளையாட்டு வீரா் மகேஷ் பூபதியால் துவங்கப்பட்ட ஒரு வரிப்பந்து பயிற்சி கழகம். இந்த பயிற்சி கழகமானது இந்தியாவில் 9 மாநிலங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களிலும் உள்ளது.

 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மோகனா செல்வராஜ்