ALL VIDEO ஆன்மீகம் NEWS
பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து
August 5, 2020 • Dharmalingam

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்ததாக பெய்ரூட் கவர்னர் மார்வான் அப்போத் தெரிவித்தார்.

அதிபர் மைக்கேல் அவோன் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு புதன் கிழமை (ஜூலை:50) ஏற்பாடு செய்தார். நாட்டில் 2 வார காலத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

50 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த போரில் ஏற்படாத துயரம் ஒரேயொரு வெடி விபத்தால் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நகரமே 40 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் பெய்ரூட் செல்ல உள்ளார். இரு விமானங்களில் பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த மீட்புப்படையினரும் பெய்ரூட் செல்ல உள்ளனர்.

முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய மேக்ரான், ' லெபனான் அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளேன். லெபனான் பிரான்ஸ் நாட்டுடன் பொருளாதார ரீதியாக நீண்டகால நட்பு நாடாக உள்ளது.' இவ்வாறு தெரிவித்தார்

ஐரோப்பிய கமிஷன் 100க்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்பு படையினரை மீட்புபணிக்காக அனுப்ப உள்ளது. செக் குடியரசு, , ஜெர்மனி, கிரீஸ், போலந்து, நெதர்லேண்ட் போன்ற நாடுகளும் இருந்தும் பெய்ரூட் சம்பவத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன.