ALL VIDEO NEWS ஆன்மீகம்
பெண் அதிபராகும் தகுதி கமலா ஹாரிஸூக்கு இல்லை- டிரம்ப்
August 30, 2020 • Dharmalingam

ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.

அந்தவகையில், குடியரசு கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் முதல் பெண் அதிபரை நான் பார்க்க விரும்புகிறேன் என தெரிவித்த அவர், கமலா ஹாரிஸ் வருவதைப் பார்க்க நான் விரும்பவில்லை எனக் கூறி, கமலா ஹாரிஸூக்கு அந்த தகுதி இல்லை என விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், அந்த தகுதிகள் இவாங்காவிடம் இருப்பதாகவும்,  இவான்கா அதிபராக வேண்டும் என மக்கள் பலரும் விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.