ALL NEWS ஆன்மீகம் VIDEO
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் - உயர் அதிகாரி முறை கேடு
July 31, 2020 • Dharmalingam

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் உள்ளது. 

ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் தினமும் பூஜைகள் நடத்த அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

கோயில்களில் பூஜைக்குரிய பொருட்களை  பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை ஏலம் எடுத்தவர் கோயில் நிர்வாகத்திடம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏலம் எடுத்தவர் பூ, மாலை அளித்ததாக கூறி ஒவ்வொரு மாதமும் ரூ.36 ஆயிரம் வீதம் நான்கு மாதங்களுக்கு சேர்த்து ரூ.1.44 லட்சம் வரை ஏலம் எடுத்தவருக்கு பில் செட்டில் செய்ததாக கூறி கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏலம் எடுத்த நபருக்கு அந்த தொகை தரப்படவில்லை,  தரப்பட்டது போன்று உயர் அதிகாரி ஒருவருக்காக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக,  கூடுதல் ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது