ALL ஆன்மீகம் NEWS VIDEO
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேச அனுமதி வழங்குவதில் விதிமுறைகள் மீறல்
November 8, 2019 • Dharmalingam

பெங்களூரு: சொத்து  குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை  சந்தித்து பேச அனுமதி வழங்குவதில் தொடர்ந்து விதிமுறை மீறி வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது. மறைந்த தமிழக முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மீதான  சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட  மூன்று பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியதை தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி  14ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவர்களுக்கு பல்வேறு  சலுகைகள் வழங்கியதாக தகவல் வெளியாகியது. இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்த  அமைக்கப்பட்ட குழு கொடுத்த  அறிக்கையிலும் சலுகை வழங்கியது உறுதி  செய்யப்பட்டது. இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிவரும் சசிகலாவுக்கு,  சிறையில் உள்ள அவரை சந்திக்க வருவோருக்கு அனுமதி வழங்குவதிலும் விதிமுறை  மீறில் நடந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. சிறையில் உள்ள சசிகலாவை யார்  யாரெல்லாம் சந்தித்து பேசினார்கள் என்ற விவரம் கேட்டு பெங்களூருவை சேர்ந்த  ஆர்.டி.ஐ. ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி விண்ணப்பித்திருந்தார்.

அவருக்கு  சிறை துறை சார்பில் கொடுத்துள்ள விவரத்தில்  கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ஓய்வு  பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, டிடிவி.தினகரன் மற்றும் புகழேந்தி உள்பட 6  பேர் சந்தித்ததாக கூறியிருந்தனர். இதில் முரண்பாடு  உள்ளதாக அவர்   கேட்டபோது, சிறையில் சசிகலாவை சந்திக்க சந்திரலேகா டிடிவி.தினகரன்,  புகழேந்தி உள்பட 6 பேர் வந்து சென்றதாக டைப் செய்த அறிக்கை வழங்கப்பட்டது. பின்னர்  இதில் விதிமீறல் இருப்பதாக சந்தேகப்பட்ட  நரசிம்மமுர்த்தி மீண்டும் கடந்த  ஆகஸ்ட் 20 ந்தேதி சசிகலாவை சந்திக்க வந்தவர்களின் விவரங்கள் கேட்டபோது  சிறையில் குற்றவாளிகளை சந்திக்க வருவோரின் வருகை பதிவேட்டில் இரண்டு  நபர்கள் (சந்திரலேகா மற்றும் அவரின்  உதவியாளர் மதன்ராஜ் ஆகிய இருவர்)   மட்டுமே சந்தித்ததாக உள்ளது. சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள்  பதிவேட்டில் இருவேறு தகவல் கிடைத்துள்ளது மேலும் சர்ச்சையை  ஏற்படுத்தியு