ALL ஆன்மீகம் VIDEO NEWS
புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு
July 31, 2020 • Dharmalingam

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படும். புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். 

புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் இ - பாஸ் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளார்.

சச்சின் பைலட் மீது நடவடிகக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக காங்கிரஸ் கொறடா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடைக்கு எதிராக தலைமை கொறடா மனுத்தாக்கல் செய்துள்ளார். தலைமை கொறடா மகேஷ் ஜோஷி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.