ALL ஆன்மீகம் NEWS VIDEO
புதிய பசுமை வழிச் சாலை!-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
June 3, 2020 • Dharmalingam

டெல்லி- அமிர்தசரஸ் இடையே புதிய பசுமை வழிச் சாலை!

நகோடரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு புதிய பசுமை வழிச் சாலை ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

டெல்லி- அமிர்தசரஸ் விரைவுவழிச் சாலையின் ஒரு பகுதியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு புதிய பசுமை வழிச் சாலை ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுல்தான்பூர் லோதி, கோயிந்த்வால் சாகிப், கடூர் சாகிப், கர்தார்பூர் சாகிப் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பசுமைவழி சாலை அமையவிருக்கிறது.

இந்த பசுமை வழிச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம்  வரும் அமிர்தசரஸ் நகரத்தை குறுகிய காலத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்படுகிறது.