ALL VIDEO ஆன்மீகம் NEWS
பீலா ராஜேஷ் நீக்கம்
June 12, 2020 • Dharmalingam

சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து பீலா ராஜேஷ் நீக்கம்!

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிய சூழலில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சுகாதாரத்துறை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவரிடம் ஏற்கனவே இருந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2012 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணனுக்கு, மீண்டும் அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.