ALL ஆன்மீகம் NEWS VIDEO
பீதியூட்ட வேண்டாம் - ராயபுரம்
May 24, 2020 • Dharmalingam

பீதியூட்ட வேண்டாம் ராயபுரம் என்றாலே பலரும் முகம் சுளிக்கும் நிலை உருவாகியிருக்கிறது ஆனால்  ராயபுரம் மண்டலம் சென்னையின் பல பகுதிகளை உள்ளடக்கியது என்பது பலருக்கு தெரியாது: கிட்டதட்ட 15 வார்டுகளை உள்ளடக்கிய ராயபுரத்தில் தான்  பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம், கொண்டித்தோப்பு, ஏழுகிணறு செளகார்பேட்டை,  முத்தியால் பேட்டை   பெரியமேடு, எழும்பூர் பாரிமுனை, சிந்தாதிரிப்பேட்டை எழும்பூர் , கோமாளிஸ்வரன் பேட்டை, என்று திருவல்லிக்கேணி வரை நீளுகிறது, இதன் மக்கள் தொகை கிட்டதட்ட 6  லட்சத்து 34 ஆயிரம் . இதில் அடங்கியிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 687 . எனவே தினமும் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 1600 தாண்டியது என்ற   பீதியூட்டும் கணக்கெல்லாம் வேண்டாம் என்கிறார்கள், இந்த பகுதி வாசிகள், 
இந்த பகுதியில் தான் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக  கருதப்படும் ஸ்டான்லி மருத்துவமனை இருப்பதால் நோயாளிகள் நடமாடும் இடமாக  அதிகரித்துள்ளது, கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் 65 பேர் இதன் கணக்கில் தான் வருகிறது,  இந்த மருத்துவமனை அருகிலேயே   ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை இருக்கிறது, இங்கு மகப்பேறுக்கு வந்திருக்கும் 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, இதனால் லேபர் வார்டு என்றழைக்கப்படும் பகுதிகள் பாதுகாப்பு வளைத்திற்கு வந்திருக்கின்றன, இதன் காரணமாக  நோயாளிகளோடு வந்திருக்கும் உறவினர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பலர் வெளியே நடைபாதைகளில் துாங்கிக்கொண்டிருக்கிறார்கள்,  இதில் அதிர்ச்சித்தரத்தக்க விசயம் டாக்டர்களும்  செவிலியர்களும் நோய்த்தொற்றில் சிக்கியிருக்கிறார்கள், என்று வெளியாகும் செய்திகள் தான் மருத்துவமனையில்   மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் டாக்டர்களும் நோய்த் தொற்றில் தவிப்பதால் ராயபுரம் மட்டுமல்ல: வடசென்னையும்  தத்தளிப்பில் இருக்கிறது.,என்றாலும் மற்ற பகுதிகளை விட ராயபுரத்தில் அதிக பாதிப்பில்லை, இங்குள்ள ஆதம்சாயபு தெரு, மேற்கு மாதாகோவில் தெரு, ஜி.எம்.பேட்டை சேக் மேஸ்திரி தெரு, சஞ்சீவிராயன் கோவில் தெரு, நரசியர் தெரு, தெலுங்குசெட்டி தெரு, நாராயணப்ப நாய்க்கன் தோட்டம், உள்ளிட்ட சில தெருக்களில் ஒரு சில நோயாளிகளே இருந்தார்கள், அவர்களில் பெரும்பாலோர் இப்போது, குணமடைந்து வீடுகளில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், எனவே ராயபுரம் என்பது சென்னையின் பல பகுதிகளை உள்ளடக்கிய மண்டலம் என்ற பார்வையோடு பாருங்கள் என்பதும் தேவையில்லாத பீதிக்குள்ளாக்க வேண்டாம் என்பதும் தான்  இப்பகுதி மக்களின் வேண்டுகோள்