ALL ஆன்மீகம் NEWS VIDEO
பாலிவுட் நடிகர்-தற்கொலை
June 14, 2020 • Dharmalingam

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சுயசரிதையில் ஹீரோவாக நடித்த  பாலிவுட் நடிகர்  சுஷாந்த் சிங் ராஜ்புத் (21 January 1986 – 14 June 2020)மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை.

எம். எஸ். தோனி (M.S. Dhoni: The Untold Story ) என்பது 2016 ஆண்டு வெளியான ஒரு இந்திய, தன்வரலாற்று விளையாட்டுக் கதைத் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் நீரஜ் பாண்டே.

இப்படம் இந்திய தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த மகாந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்பட்ம். இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமான தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார்

2019ல் ஷ்ரத்தா கபூரூடன் இணைந்து சுஷாந்த் நடித்திருந்த 'Chhichhore'படம் வணிகரீதியில் மட்டுமல்லாது விமர்சனரீதியிலும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சஞ்சனாவுடன் இவர் நடித்துள்ள 'Dil Bechara'படம் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.

தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக அந்தப் படம் தயாராகியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்னையால், அந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்த சுஷாந்த், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.