ALL ஆன்மீகம் NEWS VIDEO
பார்த்தாலே நாவூறும் பாஸ்தா பாயாசம்
August 14, 2020 • Dharmalingam

அன்பு வாசகர்களே

பார்த்தாலே நாவூறும் பாஸ்தா பாயாசம் - எளிமையான ரெசிபி இதோ..

 

இனிப்பு சுவையில் பார்த்தாலே சுவைக்கத் தூண்டும் வகையில் பாஸ்தாவில் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்தா - 1 1/2 கப்

பால் - 3 கப்

சர்க்கரை - 1/2 கப்

நெய் - 1 tsp

முந்திரி - 10

அரைக்க:

முந்திரி - 8

தேங்காய்- 1/4 கப்

செய்முறை :

முதலில் தண்ணீரில் பாஸ்தாவை வேக வைத்துக்கொள்ளுங்கள்.  ஜாரில் தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

கிண்ணம் வைத்து பால் கொதிக்க வையுங்கள். பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து கலக்குகள். அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவையும் சேர்த்து கிளறுங்கள்.

ஐந்து நிமிடங்களுக்கு சிறு தீயில் கொதிக்க வையுங்கள். தேவையான பதம் வந்ததும் நெய் முந்திரி போட்டு தாளித்து பாயாசத்தில் ஊற்றுங்கள்.

குங்குமப்பூ இருந்தால் தூவலாம். அவ்வளவுதான் சுவையான பாஸ்தா பாயாசம் தயார்.

சூப்பரான சுவையில்  பாஸ்தா பாயாசம் ரெடி
 
இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.

மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா