ALL VIDEO ஆன்மீகம் NEWS
பாரதிய ஜனதா - நடிகை நமீதா
July 3, 2020 • Dharmalingam

 

தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.

பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.

ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசம்:

தமிழகத்தில் வருகின்ற ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது போல் தற்போது ஒரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உடன் விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை 6ஆம் தேதி முதல் வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடி கிராமத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு, தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

பிரேசிலில் அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்து கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாதத்தில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு 

______________

இந்திய ரயில்வே சாதனை:

நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கி.மீ நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

__________________

அடுத்த 24 மணி நேரத்தில்...:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.