ALL VIDEO ஆன்மீகம் NEWS
பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்வு
August 4, 2020 • Dharmalingam

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த  ஜூலை  01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன்  வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 17 பேர்  தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் என்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி என்.எல்.சி. விபத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.