ALL VIDEO ஆன்மீகம் NEWS
பாகுபலி இயக்குநர் கொரோனா தொற்று
July 30, 2020 • Dharmalingam

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். பரிசோதனைக்கு பின் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் பரிந்துரைத்தபடி வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

 

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. உலகளவில் கொரோனாவின் பாதிப்பு சில நாடுகளில் குறைந்துள்ளது.

சில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அதிகரிக்கும் நாடுகளில்  இந்தியாவும் ஒன்று.

அதிக பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. தற்போது, 3வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது.