ALL VIDEO ஆன்மீகம் NEWS
பல கோடியில் பங்களா சசிகலா தடபுடல்
August 4, 2020 • Dharmalingam

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் உள்ளார். தண்டனை காலம் முடிந்து, அவர் விரைவில் வெளியில் வருவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் ஜெ. வாழ்ந்த வீட்டை, தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்துள்ளது. இந்த வீடு, தற்போது அரசுடைமையாகி உள்ளது.

சிறையில் இருந்து வெளியில் வரும் சசிகலா, போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேற முடியாது.

தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் உடையதாக, இரண்டு பிரிவுகளாக, இந்த பங்களா கட்டப்பட்டு வருகிறது.

இதனால், போயஸ் கார்டனில் ஜெ., வீடு அருகிலேயே, சசிகலாவுக்காக பல கோடி ரூபாய் செலவில், சொகுசு பங்களா கட்டப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.