ALL VIDEO ஆன்மீகம் NEWS
நுாலகங்களை திறக்க வேண்டுமென, வாசகர்கள் வேண்டுகோள்
July 31, 2020 • Dharmalingam

மாவட்டத் தலைமை நுாலகங்களில், ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா பரவலால், கடந்த மார்ச் 25ல் நுாலகங்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களாக இவை மூடப்பட்டிருப்பதால், வாசகர்கள் தவிக்கின்றனர்.

வாசகர்கள் கூறுகையில், 'நுாலகங்களை திறக்க வேண்டுமென, வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாநிலம் முழுதும், மாவட்ட, மைய, கிளை நுாலகங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுாலகங்கள் உள்ளன.

கங்களுக்கு, வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகளவில் வருவர். இங்கு, சமூக இடைவெளி கடைபிடிப்பதில், எந்தச்சிரமமும் இருக்காது.

நுாலக உறுப்பினர்களாக உள்ளவர்கள் பலரும், கொரோனா விழிப்புணர்வு உள்ளவர்களாகவே இருப்பர். எனவே, நுாலகங்கள் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள், இந்த நேரத்தில், அறிவுப்பூர்வ விஷயங்களை அறிந்துகொள்ள புத்தக வாசிப்பு உதவும்,' என்றனர்.