ALL ஆன்மீகம் NEWS VIDEO
நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
August 7, 2020 • Dharmalingam

மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு  செப்டம்பர்  13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில்.அவர்களது மனுவில்,கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் தேர்வை நடத்த வேண்டும் என்றும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை எழுதுவதற்கு மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.