ALL VIDEO NEWS ஆன்மீகம்
நாட்டு கோழி கறி
August 9, 2020 • Dharmalingam

குழந்தைகள் கூட இந்த நாட்டு கோழி  கறியை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க. செய்வதும் மிக மிக சுலபம்.

ஈஸியான, டேஸ்டியான  நாட்டு கோழி  கறி எப்படி செய்வது.

பார்க்கலாம் வாங்க.

சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் .

தேவையான பொருட்கள்:

நாட்டு கோழி 1/2 kilo
எண்ணெய் - 4 tblspn
பட்டை, லவங்கம் , பிரியாணி இலை  தேவையான அளவு
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
வெங்காயம் - 3 பெரியது பொடியாக நறுக்கியது
இஞ்சி  1 
தக்காளி - 3 பெரியது  பொடியாக நறுக்கியது
மல்லி தூள்  1tsp 
பூண்டு – 10 கிராம் உரித்தது
கரம் மசாலா 1/2 tsp
மிளகாய் தூள்,1tsp
தயிர், 1 cup
உப்பு - தேவையான அளவு
நெய் தேவையான அளவு

செய்முறை :

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் நெய் விட்டு முதலில் இஞ்சி, பூண்டு நறுக்கியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நாட்டு  கோழிக்கறியினை தயிர் சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துப் புரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.

கறி முக்கால் பாகம் வெந்த நிலையில் நறுக்கின தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

அதன்பின் பொடியாய் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

அவ்வளவுதான்  நாட்டு கோழி கறி  ரெடி.

சூப்பரான சுவையில்  நாட்டு கோழி   கறி  ரெடி

மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா