ALL VIDEO NEWS ஆன்மீகம்
தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதால்- கூட்டணி கட்சிகளுக்கு பலன் - பிரேமலதா விஜயகாந்த்
August 8, 2020 • Dharmalingam

 

காணொளி காட்சி மூலம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் தேமுதிக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் பிரேமலதா விஜயகாந்த்.

கொரோனா காலகட்டத்தில் தேமுதிக மக்களுக்கு செய்து வரக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த அவர், பின்பு வரக்கூடிய தேர்தலில் தேமுதிக கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற வேண்டுமெனவும் அதற்கேற்ப பணிகளை தற்போது துவங்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்து வைத்து கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறதே தவிர தேமுதிக கட்சிக்கோ, தேமுதிக தொண்டர்களுக்கோ எந்த பலனும் கிடைப்பதில்லை.

எனவே தற்பொழுது வரக்கூடிய தேர்தலில் கூட்டணி இருக்கிறதோ இல்லையோ, எப்படி தேர்தல் அமைந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு விஜயகாந்த் ஆலோசனை வழங்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் நேரில் ஆலோசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.