ALL ஆன்மீகம் NEWS VIDEO
தெரிந்து கொள்வோம்!! -ஒரு வரியில்..!!
May 31, 2020 • Dharmalingam

தெரிந்ததும்.. தெரியாததும்.. அறிந்ததும்.. அறியாததும்.. ஒரு வரியில்..!!  தெரிந்து கொள்வோம்!!


🌟 கிரானைட் நகரம் என்றழைக்கப்படுவது அபெர்டீன் (ஸ்காட்லாந்து).

🌟 உலகின் ஆழமான ஏரி ரஷ்யாவில் உள்ள பாய்க்கால் ஏரி.

🌟 முதலைகளால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

🌟 உலகில் மிக உயரமான அருவி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

🌟 குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் மெர்குரி.

🌟  மிக நீளமான எல்லையை கொண்ட நாடு, சீனா.
🌟 உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் ஜப்பானியர் ஆவார்.

🌟 ஜப்பான் நாட்டின் எழுத்தறிவு விகிதம் கிட்டத்தட்ட 99% ஆகும்.

🌟 ஜப்பானில் இரவு நடனம் என்பது 2015 வரை சட்ட விரோதமானதாக இருந்தது.

🌟 ஜப்பான் 6,800-க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டுள்ளது.

🌟 ஜப்பானின் 90% கையடக்க தொலைப்பேசிகள் நீர் புகாதவை ஆகும்.

🌟 வேலை செய்யும்போது தூங்குவதை, அது கடினமான உழைப்பால் ஏற்பட்ட சோர்வு என்று ஜப்பான் ஏற்றுக்கொள்கிறது.

🌟 ஜப்பானில் கருப்பு பூனைகளை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.

🌟 ஜப்பானில் உள்ள ரயில்களின் சராசரி தாமத நேரம் வெறும் 18 வினாடிகள் ஆகும்.

🌟 ஜப்பானில் குழந்தைகளைவிட செல்லப்பிராணிகள் அதிகமாகும்.

🌟 சதுர வடிவ தர்பூசணிகள் ஜப்பானில் விளைகின்றது.