ALL NEWS ஆன்மீகம் VIDEO
தென்மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்
August 7, 2020 • Dharmalingam

தென்மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில், இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார்.

இந்நிலையில், இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் , காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன்  முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நெல்லை மாவட்டத்தில் ரூ.196.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், தென்காசி மாவட்டத்திற்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் முதல்வர் பழனிசாமிதிறந்துவைத்தார்