ALL VIDEO ஆன்மீகம் NEWS
துணை முதல்வர் வீடு- பாதுகாப்புப் பணி போலீசாருக்கு கொரோனா
June 28, 2020 • Dharmalingam

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு உள்பட, அப்பகுதியில் உள்ள அமைச்சர்கள் வீடுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

முதல்வர், துணை முதல்வர் உள்படத் தமிழ்நாடு அமைச்சர்களின் அரசு வீடுகள் சென்னை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சமீப நாட்களாக அதிகளவில் போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து, வியாழக்கிழமை அன்று மேலே குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸ் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரும் கிண்டி ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.