ALL ஆன்மீகம் NEWS VIDEO
திமுக தலைவர் கலைஞர் குறித்து வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது அவதூறு வழக்கு:சைதை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
August 4, 2020 • Dharmalingam

 

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வீடியோவில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் குறித்து தவறாகவும், அவரை பற்றி நல்ல விதமாக பரப்படும் தகவல்கள் தவறு என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பெயருக்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் கலைஞர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து, இறந்தவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட மாரிதாஸ் மீது அவதூறு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.