ALL VIDEO NEWS ஆன்மீகம்
தலைவர்கள்- தமிழறிஞர்கள் - சிலைக்கு மரியாதை அரசாணை
July 31, 2020 • Dharmalingam

தலைவர்கள், தமிழறிஞர்கள், சிலைக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. ஊரடங்கு காலத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மரியாதை செலுத்தலாம். மரியாதை செலுத்தப்படும் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.