ALL ஆன்மீகம் NEWS VIDEO
தலைவர்கள்-கருத்து
June 9, 2020 • Dharmalingam

10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு+குட்டு! நாளைய ஆர்ப்பாட்டம் வாபஸ்.

அரசியல் கட்சிகளின் கருத்தைக் கூட அல்ல - உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கவலையைக் கூட கருத்தில் கொள்ள நேற்றைய தினம் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு மறுத்து விட்டது. இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆலோசித்து, அ.தி.மு.க. அரசின் மாணவர் விரோதப் போக்கினை கண்டிக்கும் வகையிலும், "பத்தாவது வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் 10.6.2020 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அவசரமாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, "மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படும். 'ஆல் பாஸ்' என்று அறிவிக்கப்படும்" என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு காலங்கடந்து ரத்து செய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.

தெலங்கானாவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: சந்திரசேகர ராவ் பள்ளிக்கூடத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் கிரேடு பிரிக்கப்படும், எனவும் தெலங்கானா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.