ALL ஆன்மீகம் NEWS VIDEO
தமிழக செய்திகள்
August 12, 2020 • Dharmalingam

 

தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

_______________

ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக அருண் பாலகோபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பி.யாக எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

___________________

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கப்படாததால் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

_____________________

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

________________

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.1,832 குறைந்து 40,104 ரூபாயாக விற்பனையாகிறது.