ALL VIDEO NEWS ஆன்மீகம்
தமிழக அரசு செய்திகள்
July 30, 2020 • Dharmalingam

 

இலவசப் பொருட்கள் கிடையாது:

ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 61 நியாயவிலை கடைகளில்  செயல்பாட்டிற்கு வந்தது.

மீண்டும் கட்டணம் வசூல்:

தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் 5 சுங்கச்சாவடிகளில் 126 நாட்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு:

தமிழக காவல்துறையில் 18 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.