ALL ஆன்மீகம் NEWS VIDEO
தமிழகத்தில் தான் உயிரிழப்பு -மிகக்குறைவு
June 13, 2020 • Dharmalingam

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ’சென்னையில் கொரோனாவின் வீரியம் அதிகமாக உள்ளதால், மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை முறையாக  பின்பற்றினால் கொரோனா வராது என்றும் கூறினார்.

நிர்வாக காரணங்களுக்காகவே சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டதாக விளக்கமளித்த அமைச்சர் அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினார்.

தமிழகத்தில் தான் உயிரிழப்பின் சதவீதம் 0.8 என்று மிகக்குறைவான அளவில் உள்ளதாகவும் கூறினார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாது என்று கூறிய அமைச்சர், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யும் கட்சிகள் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும்,  சென்னை முழுவதும் உள்ள 8 லட்சம் முதியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்