ALL VIDEO ஆன்மீகம் NEWS
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
July 30, 2020 • Dharmalingam

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு  அமல்படுத்தப்படும்
 
* நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆக.31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
* சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி
 
* சென்னையில் ஆக.1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
 
* சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
 
* நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி
 
* மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில், மசூதி, தேவாலங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை
 
* தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி
 
* பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்
 
* பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம்
 
* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் இ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்
 
* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்

தமிழகம் முழுவதும் மத்திய அரசு வழிகாட்டுதல் படி, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  

சுதந்திர தினத்தின் போது தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவை கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாதி, மதம், இனத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது; தமிழ்நாட்டு மண் அமைதியான மண் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அரசியல் தான் எடுப்படும். மேலும் குறுகிய மனப்பான்மையுடன் யார் அரசியல் செய்தாலும் அதற்கு தமிழக மக்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.