ALL ஆன்மீகம் NEWS VIDEO
தமிழகத்தில் கரோனா குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்-முதல்வா்
August 9, 2020 • Dharmalingam

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்; அதேவேளையில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகள்- சேலம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தீநுண்மி பரவல் இன்னும் குறையவில்லை.

குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணா்வுகள் தெரிவிக்கின்றனா்.

நிலைமைக்கு ஏற்ப தமிழக அரசு செயல்படும். தமிழகத்தைப் பொருத்தவரையில், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்போது பள்ளிகள் திறக்கப்படும்.