ALL NEWS ஆன்மீகம் VIDEO
தமிழகத்தில் இ பாஸ் ரத்தாகுமா முதல்வர் ஆய்வு
August 24, 2020 • Dharmalingam

கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு  இடையிலான பயணங்களுக்கும் இ பாஸ் முறை அமலுக்கு வந்தது.

சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியது. அதில்,  மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று கூறியது.

தமிழகத்தில், இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா வேண்டாமா..? என்பது  குறித்து முதல்வர் இன்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.