ALL ஆன்மீகம் NEWS VIDEO
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டணம் ஐகோர்ட் கிளை உத்தரவு
August 4, 2020 • Dharmalingam

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டணம் அரசு நிர்ணயித்தபடி உள்ளதா? என தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசாணையின் படி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையை சேர்ந்த சக்திகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

 

துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானத்தில் வந்த 180 பேர் தனிமைப்படுத்துவதற்காக தனித்தனி பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.

அப்போது ஒரு பேருந்து அருகே நின்ற ஒருவர், பயணியிடம் பணத்தை கொடுத்து பார்சல் வாங்கியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.