ALL ஆன்மீகம் NEWS VIDEO
தங்கம் விலை மேலும் மேலும் அதிகரிப்பு
August 3, 2020 • Dharmalingam

தங்கம் விலை மேலும் மேலும் அதிகரிப்பு: 42 ஆயிரத்தை நெருங்கியது சவரன்

காட்சி பொருளாகிறது தங்கம்- ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி

தங்கம் விலை சவரன் 42 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை, நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாவால் உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஆனால், தங்கம் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில்  12வது நாளாக தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு 46 அதிகரித்து ஒரு கிராம் 5196க்கும், சவரனுக்கு 368 அதிகரித்து சவரன் 41568க்கு விற்கப்பட்டது.

இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை