ALL VIDEO ஆன்மீகம் NEWS
தக்காளி -ஒரு அலசல்
June 29, 2020 • Dharmalingam

 

தக்காளி சாதம்,தக்காளி சட்னி, தக்காளி புலாவ், தக்காளிக்காய் பச்சடி, தக்காளி பருப்பு, தக்காளி குழம்பு, தக்காளி தொக்கு, தக்காளி சாலட்  என்று பல  விதம்  சமையலில்  நாம்  தக்காளியை  அதிகம்    பயன் படுத்தி வருகிறோம்.

தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும்.

இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும்.[1] ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.

ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.

இந்தியாவில் தக்காளி

மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர்.

  • மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
  • நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி எனவும் வழங்குவர். 
  • நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்க பட்டானி அளவு

தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.

காய்கறி விலைகள் றெக்கை கட்டிப் பறக்கிற சீஸனில் கூட.. மலிவான விலையில் மனம் போல கிடைப்பது ‘தளதள’ தக்காளி மட்டும்தான்!

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.  உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
 
தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில்  பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட்  (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு  சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
 
தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும்  தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும்.
 
தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டிஎன்ஏ தான் நமது  சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன்,  வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.
 
சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால்  ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது.
 
தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. தக்காளி பழத்தில்  வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும்  திடமாகவும் மாற்றுகின்றன.
 
தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும்  பயன் படுத்தி  நம்முடைய உடலை   காப்போம் 
 
 
தொகுப்பு   மோகனா  செல்வராஜ்