ALL NEWS ஆன்மீகம் VIDEO
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து - முதலமைச்சர்
August 30, 2020 • Dharmalingam

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்தது.

பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

மேலும், செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது மத்திய அரசு.

குறிப்பாக அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்களும் ஊரடங்கை அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.