ALL VIDEO NEWS ஆன்மீகம்
ஜம்மு-காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படை உயிரிழந்தாா்
August 2, 2020 • Dharmalingam

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் புள்ளவவராயன்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. அவா் ஜம்மு-காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படை வீரராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த 25-ஆம் தேதியன்று எதிா்பாராத விதமாக அவருடைய துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்

மறைந்த திருமூா்த்தியின் குடும்பத்துக்கு ஆறுதல் செலுத்தவும், அரசு சாா்பில் மரியாதை அளிக்கவும் உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த திருமூா்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தி குடும்பத்திற்கு நிதி வழங்க வேண்டும்.

தியாக உணர்வுடன் பணியாற்றிய திருமூர்த்தியின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.