ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்தி துளிகள்
June 8, 2020 • Dharmalingam

செய்தி துளிகள்:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளார் 

* கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா வைரஸ்  பரிசோதனை செய்யப்படவுள்ளது

                                                            ******************

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.56 லட்சத்தை கடந்தது; கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேர் பாதிப்பு.

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது; கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் உயிரிழப்பு

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு..

தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது

சென்னையில் கொரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு

முதற்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் - சுகாதாரத்துறை.

                                                         ******************

* கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை.* கோவையில் ஒரு பள்ளி, சென்னையில் 3 பள்ளிகள் குறித்து விசாரணை.* கொரோனா காலத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கெனவே அரசு உத்தரவு

                                                        ******************

திருமழிசை சந்தையை கோயம்பேடுக்கு தற்போது மாற்றாவிட்டால் பின்னர் அரசே நினைத்தாலும் தங்களை காப்பாற்ற முடியாது என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                                         ******************

இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு உலக வானிலை ஆய்வு நிறுவனம் பாராட்டு!