ALL ஆன்மீகம் NEWS VIDEO
செய்திப்பிரிவு
June 13, 2020 • Dharmalingam

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,31,673ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,25,273ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,28,210ஆக உயர்வு

**************************

ஒரு கோடி இந்தியர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.

**************************

சென்னை சென்று திரும்பிய கோவில்பட்டி தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரிந்த தபால் அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டது!

*************************

முதலமைச்சர்களுடன் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி ஆலோசனை....

*********************

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை மறுநாள் (15/6/2020) காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து வைத்தார்  முதல்வர் பழனிசாமி!

*******************

சென்னையில் இருந்து வெளியே செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்படவில்லை என தமிழக அரசு விளக்கம்.

********************

விரைவில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும்: பள்ளிகல்வித்துறை