ALL VIDEO NEWS ஆன்மீகம்
செய்திப்பிரிவு -
June 21, 2020 • Dharmalingam

சென்னையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைத்து, பின்னர் வீடு திரும்பும்போது ரொக்கமாக 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக 6 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

********************

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு!

ஞாயிற்றுக் கிழமையான இன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

➤ வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. 

➤ காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் திறக்க அனுமதி கிடையாது.

➤ உணவகங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்த பார்சல் சேவைக்கு அனுமதி கிடையாது.

➤ கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி இல்லை. தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கிடையாது.

நேற்று  நள்ளிரவு 12 மணி முதல் வரும் திங்கள் கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இதேபோல், வரும் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

அதேநேரத்தில், இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*************************

இந்த கிரகணம் இன்று  காலை 9:15 முதல் பகல் 3:04 மணி வரை நிகழவுள்ளது. இது இந்தியா மட்டுமின்றி மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தெரியும். 

சந்திரன் சூரியனை மறைக்கும் நிலையைப் பொறுத்து அதன் சூரிய கிரகண வகைகள் மாறு படுகின்றன. மொத்தம் 3 வகையான சூரிய கிரகணங்கள் உள்ளன. அவை முழு நேர சூரிய கிரகணம், பகுதி நேர சூரிய கிரகணம் மற்றும் வருடாந்திர அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஆகும்.இது தான் வளைய சூரிய கிரகணம்  எனப்படுகிறது.

இதனால் புவி வடக்கு அரைகோளத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் இன்று நீண்ட பகல் நாளாகும்.

*****************************

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு பாகிஸ்தான் ராணுவத்தினரும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ராம்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

***************************