ALL NEWS ஆன்மீகம் VIDEO
செய்திகள்
June 1, 2020 • Dharmalingam

செய்திகள்

மாவட்டச் செய்திகள்

2 சிறப்பு ரயில்கள் :

கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை இன்டர்சிட்டி ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்ப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  60 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி :

ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 280 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்துகளிலும் 60 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

உலகச் செய்திகள் 

19 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர். 

தென்மேற்கு பருவமழை :

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்கவுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் அலர்ட் :

கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உட்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8ஆம் தேதி முதல்... :

புதுச்சேரியில் ஜூன் 8ஆம் தேதி முதல் மத வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை :

மும்பையில் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மகாராஷ்டிரா அரசு எச்சரித்துள்ளது.