ALL ஆன்மீகம் NEWS VIDEO
செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
August 14, 2020 • Dharmalingam

கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தனது ட்வீட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் அவர் கூறுகையில், கொரோனாவை கருத்தில் கொண்டு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுடன் மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் அதிகார யுத்தத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டில் உள்ள மாணவர்கள் தாங்கமுடியாத இன்னலுக்கும், துயரத்திற்கும் உள்ளாகி அவதிப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஏற்கனவே பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து அவர்களுக்கு முதலில் பட்டப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கியிருக்க வேண்டிய நேரத்தில் மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் இன்றுவரை தங்களுக்கு டிகிரி கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?' என்ற கடுமையான மன உளைச்சலுக்கு மாணவர்கள் உள்ளாகியிருக்கிறார்கள்

 பல்கலைக்கழக மானியக்குழுவோ “தேர்வுகளை ரத்து செய்ய மாநிலங்களுக்கு உரிமை இல்லை” என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசும் இதில் “ஈகோ” பார்க்காமல்  “தங்களுக்கே அதிகாரம்” என்று விதண்டாவாதம் செய்யாமல் அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து இறுதியாண்டுத் தேர்வினை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி மாணவர்களின் மனக்குமுறலை பெற்றோருக்கு இருக்கும் பேரழுத்தத்தைப் போக்கிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.