ALL NEWS ஆன்மீகம் VIDEO
சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
August 13, 2020 • Dharmalingam

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வருடந்தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை, பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும், சென்னை கோட்டை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.