ALL ஆன்மீகம் NEWS VIDEO
சென்னை அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 6 வணிக வளாகம் 2 வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
March 6, 2020 • Dharmalingam • NEWS

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சிவன் கோவில் தெற்கு மாடவீதியில் உள்ள 6 வணிக வளாகம் 2 வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சுமார் 40 ஆண்டுகளாக சர்வே எண் 11A/7B ல் 2539 சதுரடியில்  சுமார் 15  லட்சம் வாடகை  நிலுவைத் தொகை அதிகமாக சேர்ந்ததால் கோர்ட் மற்றும் துறை உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை.

திருக்கோவில் கேட்பு வசூல் நிலுவை பதிவேட்டின்படி சுந்தர்ராஜன் ( லேட்)  தற்போதைய அனுபவதாரர்களான ரேணுகா தேவி, கிரிஜாகணேசன் , பரமசிவம் கண்ணம்மாள் ,வசந்தகுமார் சாவித்திரி, மற்றும் சரவணன் கோகிலா , ஆகியோர் வசமிருந்இந்து சமய அறநிலைத்துறை இடத்தில் வணிகம் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் சென்னை இணை ஆணையர் மற்றும் ஆணையர் நீதிமன்ற வெளியேற்ற நடவடிக்கை உத்தரவின்படி இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 79 ன் படி வருவாய்த்துறை அலுவலர்கள் காவல்துறை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர்  மேற்படி மனையின் வணிக பகுதியில் மற்றும் 2 குடியிருப்பு பகுதிகளில் இலாக்கா முத்திரையிட்டு சீலிடப்பட்டு சுவாதீனம் திருக்கோவில் வசம் கொண்டு வரப்பட்டன.
மேற்படி ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் திரு.கோ.ஜெயப்பிரகாஷ் நாராயணன் , திருக்கோயில் தக்கார் திரு.அ.குமரேசன் மற்றும் திருக்கோயில் மேலா