ALL VIDEO NEWS ஆன்மீகம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு
July 29, 2020 • Dharmalingam

 

முதலீட்டு பொருளாக மாறிவிட்டதோ?: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.40,600-க்கு விற்பனை

கொரோனாவின் வேகத்தை மிஞ்சும் தங்கத்தின் விலை  இல்லத்தரசிகள் ஷாக்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.40,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை பொறுத்தவரையில் இந்தியாவில் ஆபரண பொருளாகவும், வெளிநாடுகளில் முதலீட்டு பொருளாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பார்க்கும்போது, இந்தியாவிலும் ஆபரண பொருளாக இருந்த தங்கம், முதலீட்டு பொருளாக மாறிவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது. காரணம், அந்த அளவுக்கு அதன் விலை உயர்வு இருக்கிறது.

 

ஆரஞ்ச் எச்சரிக்கை:

கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் எர்ணாகுளம், கோட்டயம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர்:

இந்திய உள்ள ர் கிரிக்கெட்டின் மூத்த வீரர் ரஜத் பாட்டியா அனைத்து விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.