ALL NEWS ஆன்மீகம் VIDEO
சென்னை, டில்லி, மும்பை மதுரையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
August 4, 2020 • Dharmalingam

சென்னை, டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் விகிதம் சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை, மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் விகிதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் இனப்பெருக்க விகிதம் ('ஆர்' மதிப்பு) குறைந்துள்ளது.

அந்தவகையில் டில்லியில் இந்த மதிப்பு 0.66 ஆக உள்ளது. அதாவது தொற்றுக்கு உள்ளான ஒவ்வொரு 100 பேரிடம் இருந்தும் சராசரியாக 60 பேருக்கு மட்டுமே கொரோனா பரவுகிறது. இது மும்பையில் 0.81 ஆகவும், சென்னையில் 0.86 ஆகவும் உள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீண்ட நாட்களுக்கு பின் பாதிப்பு சரிந்துள்ளது. 3500க்கும் மேற்பட்டோரை தினமும் சோதிக்கும் நிலையில், 106 என்பது பெரிய எண்ணிக்கை இல்லை. இனி பாதிப்பு படிப்படியாக குறையும் என நம்புகிறோம். விரைவில் இரட்டை இலக்கமாகும்' என்றார்.

பாதிப்பு 3 சதவீதமாக சரிந்தது. கொரோனா தாண்டவத்தில் இருந்து மீள்கிறது மதுரை. ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மதுரைக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.