ALL ஆன்மீகம் NEWS VIDEO
சுமை தூக்கும் தொழிலாளர்கள்
June 9, 2020 • Dharmalingam

 

ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் நாடு முழுவதும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், அனைத்து மாநிலங்களிலும் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களாக வருமானம் இல்லாமல் சிரமப்படுவதாவும், கடன் பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ரயில்களின் வருகைக்காக காத்திருக்கும் இவர்கள் ஏதாவது வருமானம் கிடைக்குமா எனவும் எதிர்பார்க்கின்றனர். கொரோனா பாதிப்புக்கு முன்பு தினமும் ரூ.400 முதல் 500 ரூபாய் வரை வருமானம் கிடைத்ததாகவும், ஆனால் தற்போது வெறுங்கையுடன் வீடு திரும்புவது வேதனையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.