ALL NEWS ஆன்மீகம் VIDEO
சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகள் கவுரவிப்பு
August 10, 2020 • Dharmalingam

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 8ம் தேதி 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளை கவுரவிக்கும் வகையில், அப்போராட்டத்தில் பங்கேற்ற திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் பகுதியில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகிகள் சந்தியாகு (94), கணேசன் (93) ஆகியோரை இந்திய குடியரசு தலைவரால் அனுப்பிவைக்கப்பட்ட அங்கவஸ்திரம் மற்றும் சால்வை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அணிவித்து, கவுரவித்தார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் ச.வித்யா, வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

________________________________

ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், பாலாபுரம், வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், ராஜாநகரம், வெடியங்காடு, எரும்பி உள்ளிட்ட பலவேறு இடங்களில் இன்று ஆடி பொங்கல் வைக்க உள்ளதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொங்கல் வைக்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வருவாய் துறையினர், “ஊர்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடி பொங்கல் வைக்க கூடாது. இதேபோல், ஆடி கிருத்திகை விழா கூட்டம் கூடி நடத்தக்கூடாது. வார சந்தை நடத்தக்கூடாது” என தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், அதை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.