ALL VIDEO ஆன்மீகம் NEWS
சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் பகுதி 2
August 13, 2020 • Dharmalingam

சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். -பகுதி 2

கிரகபதி அவதாரம்: விஷ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக பிறந்தார். சிவபெருமான் அவருக்கு கிரகபதி என பெயரிட்டார் விஷ்வணார். பிரகபதிக்கு ஒன்பது வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் கூறினார். பின்பு சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் அவருக்கு இருந்த தோஷம் விலகியது.

துருவாச அவதாரம்: அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவி ஆவார்.

அனுமான் அவதாரம்: குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் அவதாரம்தான் ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு பணிபுரிய இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்துள்ளார்.

ரிஷப அவதாரம்: பார்க்கடல் கடைதளுக்கு பிறகு கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான் அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கு தங்கி இருந்த பொழுது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரன் குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர் அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார்.

யாதிநாத் அவதாரம் ஒரு முறை பழங்குடி சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான் அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள் ஒரு முறை யாகித் வடிவில் சிவபெருமான் தங்க வைத்து தாங்கள் இரண்டு பேரும் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆனால் அன்று இரவு வன விலங்குகளால் கொல்லப்பட்டார் அப்போது அவர் மனைவி சாக நினைத்தால் தனது உருவத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார் அதன்படி அவளும் அவள் கணவனும் மீண்டும் மண்ணில் பிறப்பர்.

கிருஷ்ண தர்ஷன் அவதாரம்: ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

விசு வரியா அவதாரம்: அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

சுரேஷ்வர் அவதாரம்: தனது பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான் அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம்.

நாளை தொடரும்

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

அன்புடன் பிரியா