ALL ஆன்மீகம் NEWS VIDEO
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
November 28, 2019 • Dharmalingam

மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே!

மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மகாரஷ்டிராவில் ஒரு மாதமாக நடைபெற்ற பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து புதிய கூட்டணி அரசு உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க கலந்து கொண்டனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.