ALL VIDEO NEWS ஆன்மீகம்
சிறுவன், மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார்.
June 10, 2020 • Dharmalingam

 

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு, கடந்த 7-ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.